ஒலுவிலின் முதலாவது பெண் சட்டத்தரணியாக எம்.எம். பாத்திமா ஹுஸ்னா தேர்வானார்.




(ரமீஸ் எம். லெவ்வை)
இலங்கை சட்டக்கல்லூரி நேற்று வெளியிட்ட இறுதிப்
பரீட்சையில் சித்தியடைந்து மீரா முகையதீன் பாத்திமா ஹுஸ்னா ஒலுவில் வரலாற்றில் முதலாவது பெண் சட்டத்தரணியாக வெளியாகியுள்ளார்.


இவர் தனது ஆரம்பக் கல்வி தொடர்க்கம் உயர்தரம் வரை, ஒலுவில் கமு/அக்/அல்- ஹம்றா தேசிய பாடசாலையில் கல்வி பயின்றதுடன், 2015 ம் ஆண்டு நடைபெற்ற, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் 03 A சித்தியுடன் பேராதனைப் பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு தெரிவானார். LLB பட்டத்தினை 2021ம் ஆண்டு பூர்த்தி செய்ததுடன், கடந்த வருடம் 2022 இல் Attorney at Law பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து சட்டத்தரணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இவருக்காண சத்தியப்பிரமாண நிகழ்வு இவ்வருட இறுதியில் கொழும்பு உச்ச நீதிமன்றில் இடம் பெறவுள்ளது.

மீராமுகையதீன் வட்டானை மற்றும் கதிஜா உம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மீராலெவ்வை றினாஸ் (SEUSL MA)அவர்களின் மனைவியும், முகம்மட் மதனி (SEUSL HW), முகம்மட் மஹீஸ் (Water Board ) ஆகியோரின் தங்கையும் ஆவார்.

ஒலுவில் கிராமத்தின் முதல் பெண் சட்டத்தரணிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
ஒலுவிலின் முதலாவது பெண் சட்டத்தரணியாக எம்.எம். பாத்திமா ஹுஸ்னா தேர்வானார்.  ஒலுவிலின் முதலாவது பெண் சட்டத்தரணியாக எம்.எம். பாத்திமா ஹுஸ்னா தேர்வானார். Reviewed by Madawala News on March 17, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.