3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் கிழக்கு நோக்கி சென்ற ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம். எம்.எம்.அஹமட் அனாம்.

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் இன்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரதம் இன்று காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டு 20 நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரத இயந்திர பகுதியில் தீ பிடித்துள்ளது.


இதை புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததை அடுத்து புகையிரதத்தை நிறுத்தி பாரிய விபத்தில் இருந்து பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார்

3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் கிழக்கு நோக்கி சென்ற ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம். 3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் கிழக்கு நோக்கி சென்ற ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம். Reviewed by Madawala News on March 18, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.