Video : கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட எரிபொருள் பவுஸர்.



எரிபொருள் பவுஸர் ஒன்று பத்துளு ஓயாவின் பாதுகாப்பு பக்கச் சுவர்களை உடைத்துக் கொண்டு பத்துளுஓயாவில் வீழ்ந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை கொண்டு செல்லப்பட்டு ரயில்வே பாலத்துக்கு அருகில் வந்து நின்றதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிபொருள் பவுஸர் புத்தளம் கொழும்பு வீதியில் ஆனவிழுந்தாவைக்கு அருகில் உள்ள பத்துளு ஓயாபாலத்தின் பாதுகாப்பு பக்க சுவர்களை உடைத்து பத்துளு ஓயாவில் வீழ்ந்துள்ளது.



இந்தப் பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பத்துளுஓயாவில் நீர் மட்டம் உயர்வினால் அடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் மோதியதால் நிறுத்தப்பட்ட எரிபொருள் பவுஸரின் சாரதி ஆசனத்திலிருந்து இறங்கி அதன் மேல் பகுதியில் ஏறி நின்று காப்பாற்றுமாறு சத்தமிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து முந்தலம பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சாரதியை மீட்டுள்ளனர்
Video : கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட எரிபொருள் பவுஸர். Video : கட்டுப்பாட்டை  இழந்து ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட எரிபொருள் பவுஸர். Reviewed by Madawala News on January 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.