பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் மைத்துனரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா? விசாரணை ஆரம்பம்.



புத்தளத்தில் ஜனாசாவாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணத்திற்கு கழுத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டியதில் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என புத்தளம் உதவி மரண விசாரணை அதிகாரி திரு.குலேந்திரநாத் பிரேமதாச இன்று (22) தீர்ப்பளித்தார் .


புத்தளத்தை சேர்ந்த 62 வயதுடைய முஹம்மது ஜனாப் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் கோழி இறைச்சி வியாபாரம் செய்து வந்தவர் ஆவார்.


இவர் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் மைத்துனர் எனவும், அவரின் வீட்டிற்கு முன்பாகவே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த வர்த்தகரின் ஜனாசா புத்தளத்தில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகில் உள்ள கோழி இறைச்சிக் கூடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கூரிய ஆயுதத்தால் கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், உடலை குடும்பத்தினர் கண்டெடுக்கும் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த புத்தளம் தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர்.


உடல் கண்டெடுக்கப் பட்டதையடுத்து, அந்த இடத்தைச் சுற்றி ஏராளமானோர் திரண்டிருப்பதைக் காணமுடிந்தது.


உயிரிழந்த வர்த்தகர் தனது வர்த்தக விவகாரங்களில் ஏற்பட்ட பணப்பிரச்சினையால் கவலையடைந்திருந்தமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவித்த பின்னரே மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பொலிஸ் குழுவொன்று இந்த விசாரணைகளுக்குச் சென்றுள்ளது.


புத்தளம் தலைமைக் காரியாலய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஐ.குலதுங்கவின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.எம்.டி. ஜீவன் குமார மற்றும் ஏனைய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் மைத்துனரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா? விசாரணை ஆரம்பம். பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் மைத்துனரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா? விசாரணை ஆரம்பம். Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.