நுவரெலியா – நானுஓயா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா – நானுஓயா பகுதியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 51 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நுவரெலியா – நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியை, கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் இந்த கூட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் நுவரெலியா - ஹட்டன் வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வீதி மிகவும் சரிவாக இருப்பதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் இந்த வீதி தொடர்பாக எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது முக்கிய கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு எட்டப்படும் எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட குறிப்பிட்டுள்ளார்
நானுஓயா கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.
Reviewed by Madawala News
on
January 23, 2023
Rating:

No comments: