CCTV இணைப்பு : நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்புறம் வேகமாக வந்து மோதி கடும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்.



பண்டாரகம, ஹொரண வீதியின் கொத்தலாவல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.


மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பண்டாரகமவில் இருந்து ஹொரணை நோக்கி மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் முச்சக்கர வண்டியின் பின்பகுதியும், முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.


விபத்தில் காயமடைந்த நபர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர் ஹெல்மெட் அணியாதது மற்றும் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைத்த முச்சக்கர வண்டியில் மோதியது என்பன  சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

....
CCTV இணைப்பு : நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்புறம் வேகமாக வந்து மோதி கடும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள். CCTV இணைப்பு : நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்புறம் வேகமாக வந்து மோதி கடும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள். Reviewed by Madawala News on January 16, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.