எரிபொருள் QR முறை நீக்கப்பட மாட்டாது... Qr முறைமை தொடரும்.



தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR முறைமையை அடுத்த மாதம் முதல் நீக்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


எரிபொருள் தேவைகள் முழுமையாக பூர்த்தியாகும் வரை Qr  முறைமை தொடரும் எனவும் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல, அடுத்த மாதம் நீக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.


இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருள் ஒதுக்கீட்டைத் தவிர்த்து சாதாரணமாக எரிபொருளை விநியோகிக்க ஆரம்பித்ததும், நாளாந்த அடிப்படையில் எரிபொருள் விலையை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் QR முறை நீக்கப்பட மாட்டாது... Qr முறைமை தொடரும். எரிபொருள் QR முறை நீக்கப்பட மாட்டாது...  Qr  முறைமை தொடரும். Reviewed by Madawala News on November 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.