ஓமானில் பெண்களை ஏமாற்றி விற்பனை; கைதான பெண் பிணையில் விடுதலை



ஓமானில் தொழில் பெற்று தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி அந்நாட்டில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட குறித்த பெண் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ரூபா 3 இலட்சம் கொண்ட தலா 2 சரீரப்பனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, இலங்கைப் பெண்களை சுற்றுலா வீசாவில் ஓமானுக்கு அழைத்துச் ​சென்று, அங்கு அவர்களை விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த சந்தேகநபர் சரணடைந்தததைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமை, ஏமாற்றப்பட்ட பெண்கள் வழங்கிய தகவலுக்கமைய, ​​இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் பிரதிநிதி எனத் தெரிவிக்கப்படும் தம்புள்ளையைச் சேர்ந்த ஆஷா திஸாநாயக்க எனும் பெண்ணைத் தேடி வந்த நிலையில், குறித்த சந்தேகநபர் இன்று (21) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சட்டத்தரணிகளுடன் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் பெண்களை ஏமாற்றி விற்பனை; கைதான பெண் பிணையில் விடுதலை ஓமானில் பெண்களை ஏமாற்றி விற்பனை; கைதான பெண் பிணையில் விடுதலை Reviewed by Madawala News on November 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.