இளைஞர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கவேண்டும் ..இன்று எமது தேசத்தின் ஒழுக்கம் சீர்குலைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களிடம் ஆளுமை இல்லை. ஒரு தேசமாக நாம்  வலுவிழந்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தின தெரிவித்துள்ளார். 


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


10 அடி தண்ணீர் உள்ள ஆற்றில் குதித்தால் நாம்  இறந்துவிடுவோம். நமக்கு கடலில்  குளிக்க முடியாது. தென்னை மரத்தில் ஏற முடியாது.


18 அல்லது 20 வயதிலோ அல்லது அதற்கு இடைப்பட்ட காலத்திலோ ஆயுதப்படை பயிற்சி முழு நாட்டிற்கும் வழங்கப்பட வேண்டும்.


இன்று எமது நாடு உறுதியற்ற பலவீனமான நாடாக மாறியுள்ளது. எங்களிடம் 350000 பள்ளி குழந்தைகள் உள்ளனர். ஆயுதப் பயிற்சி அளிக்கலாம். ஒரு கட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களை அதற்கு பரிந்துரை செய்தோம்.


18 அல்லது 20 வயதிற்கு இடைப்பட்ட ஒரு வருடம் அல்லது 6 மாதங்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆயுதப்படை பயிற்சியில் ஈடுபடுத்துங்கள். இது நாட்டின் மீதான வற்புறுத்தல் அல்ல என அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கவேண்டும் .. இளைஞர்கள் அனைவருக்கும் இராணுவ  பயிற்சி அளிக்கவேண்டும் .. Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.