மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த இன்டர்நெட்டில் தான் அவருக்கே மைனா என்று கேலி செய்கிறார்கள் என்னை சின்ன மைனா என்கிறார்கள் ; நாமல் M.P



யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான வரலாறு ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இதனடிப்படையிலேயே காலிமுகத்திடல் போராட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் நாமல் ராஜபக்ச கூறுகின்றார்.


பொலன்னறுவை பகுதியில் நேற்று (ஒக்.15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


மனித உரிமைகள் தொடர்பில் முன்னர் பேசிக்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க தற்போது அவ்வாறு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னர் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவு வழங்கினாலும் தற்போது அவ்வாறு கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

அதனாலேயே தூதரகங்கள் கூறுவதனை செவிமடுக்காது, காலிமுகத்திடல் போராட்டத்தை வலுவிழக்க செய்ததாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

மேலும் யுத்தத்தால் பொருளாதாரம் சீரழிந்த போது அதே கிராமங்களையே பாதித்தது கொழும்பை அல்ல.

மேலும் மஹிந்த ராஜபக்சே கொண்டு வந்த இன்டர்நெட்டில் தான் அவருக்கே மைனா என்று கேலி செய்கிறார்கள் என்னை சின்ன மைனா என்கிறார்கள் அதற்கு பரவாயில்லை.

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதி ஆகும்போது இலங்கையில் ஐந்து வீதமே இன்டர்நெட் வசதி இருந்தது.

மேலும் அந்த காலத்தில் மின்சார வசதி மந்தக் கதியில் இருந்தது. தற்போது எப்போவாவது தான் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு எமக்கு எதிராக பல வழக்குகள் போட்டார்கள்.
ஆனால் நாம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த இன்டர்நெட்டில் தான் அவருக்கே மைனா என்று கேலி செய்கிறார்கள் என்னை சின்ன மைனா என்கிறார்கள் ; நாமல் M.P மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த இன்டர்நெட்டில் தான் அவருக்கே மைனா என்று கேலி செய்கிறார்கள் என்னை சின்ன மைனா என்கிறார்கள் ; நாமல் M.P Reviewed by Madawala News on October 16, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.