மக்கள் மத்தியில் தான் தோல்வி என்ற பிம்பத்தை அழிக்க ரகசிய பிரச்சாரத்தை தொடங்குகிறார் கோத்தபாய..சில நாடுகள்  புகலிடம் வழங்கத் தவறியதை அடுத்து அண்மையில் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ச,  மக்கள் மத்தியில் தோல்வியடைந்த பிம்பத்தைத் அழிக்கவும் , அவருக்கு நெருக்கமானவர்களால் எடுக்கப்பட்ட முக்கியமான  முடிவுகளால்  அவர் தவறாக வழிநடத்தப்பட்டார் என்று கிராமங்களை நம்ப வைக்கவும்   ரகசிய பிரச்சாரத்தை தொடங்குகிறார் என இன்றைய Daily mirror பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது 'கம சமக பிலிசந்தர' திட்டத்தின் கீழ் அவர்  விஜயம் செய்த கிராமங்களுக்கு தற்போது ஊடகவியலாளர் மற்றும் தொழிலதிபர்  ஒருவரால் அமைக்கப்பட்ட குழு ஒன்று விஜயம் செய்து வருவதாகவும், 

இந்த உறுப்பினர்கள் மக்களிடம் பேசி வருவதாகவும் சில  வட்டாரங்கள்  தெரிவித்தன என Daily mirror  மேலும் தெரிவித்துள்ளது.


கோட்டபாய  ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் மற்றும்  அவருக்கு நெருக்கமானவர்களால்  தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


இந்த கிராமங்களில் கோட்டாபய ராஜபக்ச மீதான மக்களின் கருத்துக்களை சேகரிக்கவும், முன்னாள் ஜனாதிபதி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை பரிசோதிக்கவும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன.


வியத்மகா அணிக்கு நிகரான இந்தக் குழுவால் நடத்தப்படும் சமூக ஊடக பிரச்சாரங்களில் , முன்னாள்  ஜனாதிபதி எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அரசியலில் நுழைய முடியுமா என மக்களின் உணர்வுகளைக் கண்காணித்து வருகின்றனர். எனினும் தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்படவில்லை.


மறுபுறம், கோட்டபாய ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த அந்தஸ்து வழங்கப்பட்டாலும், ராஜபக்ச தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பார் என்றும், அவரது மகன் மற்றும் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக மட்டுமே அவர் அமெரிக்கா செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், கோட்டாபய  ராஜபக்சே தொடர்ந்து டலஸ் அணியுடன்  தொடர்பில் இருப்பதாகவும்  கட்சியின் வீழ்ச்சிக்கு அவரைக் குற்றம் சாட்டிய பெரும்பான்மையான மூத்த SLPP கட்சியினரால் அவர் நிராகரிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.


உண்மையில் அவர் தவறாக வழிநடத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் இரசாயன  உரக் கொள்கையை அமுல்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரசாயன  உரத்தடையானது கட்சியை அரசியல்ரீதியாக அழிப்பதோடு விவசாயத் தொழிலுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தனது சகோதரருக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி தனது தீர்மானத்தை நிலைநாட்டி சில மாதங்களுக்கு பின்னர் மன்னிப்பு கோரியிருந்தார். 


கோட்டாபய ராஜபக்சவின் பெயர் கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும், அவரிடமிருந்து கட்சி விலகி இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் கட்சியை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்பதனால் தற்போதைய ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்படுமாறும் வரிசைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவருக்கு உதவுமாறும் மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு அறிவித்திருந்தார்.


கோட்டாபய ராஜபக்ச, கட்சி உறுப்பினர்கள் எவருடனும் கலந்து ஆலோசிக்காமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் அவ்வாறு தப்பிச் சென்றிருக்கக் கூடாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு அறிவித்திருந்தார்.  (ஜமிலா ஹுசைன்)

மக்கள் மத்தியில் தான் தோல்வி என்ற பிம்பத்தை அழிக்க ரகசிய பிரச்சாரத்தை தொடங்குகிறார் கோத்தபாய..  மக்கள் மத்தியில்  தான்  தோல்வி என்ற பிம்பத்தை அழிக்க  ரகசிய பிரச்சாரத்தை தொடங்குகிறார் கோத்தபாய.. Reviewed by Madawala News on October 04, 2022 Rating: 5

2 comments:

  1. aday mynah , nee seekkiram retire aavi veetukku poi rest eduda kollai kaara kolakkaara paaviye. naattai seeralittha paaviye

    ReplyDelete
  2. annanum thambiyum sayndhu naattai kutti suwaraakkittu ippo viyakiyanam pesurangal .

    ReplyDelete

Powered by Blogger.