உலகின் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று ; ஜோ பைடன்



உலகின் அபாயகரமான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயக கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் போதிய ஒருங்கிணைப்பு இன்றி இருப்பதாக விமர்சித்தார். அண்மையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 பக்க ஆவணம் அந்நாட்டு அரசால் வெளியிடப்பட்டது.

அதில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானை அபாயகரமான நாடாக ஜோ பைடன் தெரிவித்திருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பைடனின் கருத்துக்கு இம்ரான் கான் பதிலடி

பாகிஸ்தான் உலகின் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பதிலளித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் பேசிய ஜோ பைடன், எந்த வித ஒழுங்கமைவும் இன்றி, அணு ஆயுதங்களை கையாள பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள இம்ரான்கான், அமெரிக்காவைப் போலல்லாமல், பாகிஸ்தானிடம் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளதாக தெரிவித்தார்.
உலகின் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று ; ஜோ பைடன் உலகின் ஆபத்தான  நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று ; ஜோ பைடன் Reviewed by Madawala News on October 16, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.