இப்படி ஒரு வாழ்க்கைப் 'பயணம்' # தெல்தோட்டை பிரதேசம்


தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  நூல்கந்தூர கீழ் பிரிவைச்
 சேர்ந்த மக்களும் பாடசாலை மாணவர்களும்,  நகருக்கு செல்லும் போது ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

 

ஆற்றில் நீர் குறைவாக காணப்படும் போது இலகுவாக, ஆற்றை கடந்து செல்லும் மக்கள், வெள்ளம் ஏற்பட்டால், நீரேந்தும் பிரதேசங்களில் கடும் மழை பெய்தால். ஆற்றை கடந்து செல்லவே முடியாது. 

 

நூல்கந்தூர கீழ் பிரிவு மக்கள், இந்த ஆற்றை கடந்து குறுக்கு வழியாகவே பயன்படுத்தி  நகருக்கும், பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் செல்கின்றனர்.  

 

மற்றைய வீதியில் பயணம் செய்தால் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இந்த ஆற்றை கடந்தால் 1/2 கிலோமீற்றர்  தூரத்துக்கு மட்டுமே பயணிக்க வேண்டும் என்றனர். தற்போது மழைக்காலம் என்பதால், அச்சத்துடனே​யே பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

குறுக்கு வழியால் பயணிக்கும் போது பாம்பு உள்ளிட்ட ஜந்துகளின் அச்சுறுத்தல்களுக்கும் தாங்கள் முகங்கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

 

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவந்தாலும், எவரும் ஏடெடுத்தும் பார்ப்பதில்லை என்கின்றனர். 

இப்படி ஒரு வாழ்க்கைப் 'பயணம்' # தெல்தோட்டை பிரதேசம் இப்படி ஒரு வாழ்க்கைப் 'பயணம்'  # தெல்தோட்டை பிரதேசம் Reviewed by Madawala News on October 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.