இவ்வருடம் செப்டம்பர் வரையில் இலங்கையில் 1406 வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டன.



இலங்கை முழுவதும் இவ்வருடத்தில் மாத்திரம் 1406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதிவரை மொத்தம் 1406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த ஆண்டு (2021) முழுவதும் 1405 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன், இவ்வருடம் செப்டெம்பர் வரையில் மாத்திரம் இச்சம்பவம் அதிகரித்துள்ளது.

திருடப்பட்ட வாகனங்களில் 12 பஸ்கள், 25 வேன்கள், 16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கரவண்டிகள், 116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான வாகனங்கள் அடங்குகின்றன.

திருடப்பட்ட வாகனங்களில், பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினாலேயே திருடப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வாகனத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார், வாகன சாரதிகளிளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வருடம் செப்டம்பர் வரையில் இலங்கையில் 1406 வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டன. இவ்வருடம்  செப்டம்பர் வரையில் இலங்கையில் 1406 வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டன. Reviewed by Madawala News on October 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.