பொருளாதார நெருக்கடிக்கு காரணமானோர் யார்? நீதிமன்றத்தின் சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம்
குறித்து ஆராய்வதற்காக உயர் நீதிமன்றத்தினால் முக்கியமான சில உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 203 ஆக பேணுதல் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறித்து எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியை பெறுவதற்கான காலதாமதம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலர்களுக்கு வழங்கப்பட்ட முறிகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரப்பட்டுள்ளது.
மத்திய வங்கியினால் செலுத்தப்பட்ட நிதிகளில் ஏற்பட்ட இழப்பீடு குறித்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ ஆகியோரின் உத்தரவுகள் குறித்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ ஆகியோருடனான தொடர்பாடல் அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நாணய சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானோர் யார்? நீதிமன்றத்தின் சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன. பொருளாதார  நெருக்கடிக்கு காரணமானோர் யார்? நீதிமன்றத்தின் சில முக்கிய  உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன. Reviewed by Madawala News on October 07, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.