வாழ்க்கையை கொண்டு நடாத்த சிரமம் எனக் கூறி, கசிப்பு தயாரித்து விற்றுவந்த அதிபரை பதவி நீக்கியதுடன், அவர் குறித்த விசாரணைகளை உடன் மேற்கொண்டு அறிக்கைடிசமர்ப்பிக்கும்படி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கசிப்பு பாவனை மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பதுளை மாவட்ட அரச பாடசாலை அதிபர் ஒருவர் குறித்த தகவல், பொலிசாருக்கு கிடைக்கவே குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் இரண்டு போத்தல் கசிப்புடன், குறித்த அதிபரை கைது செய்தனர்..
இந்நிலையில் குறித்த அதிபர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்த பொருளாதார வசதியின்மையினால், கசிப்பு தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக, அந்த அதிபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெலவிற்கு கிடைத்த அறிவிப்பையடுத்து, அவர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு, தமக்கு அறிக்கை உடன் சமர்ப்பிக்கும்படி, வலயக்கல்விப பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையை கொண்டு நடாத்த சிரமம் எனக் கூறி, கசிப்பு தயாரித்து விற்றுவந்த பாடசாலை அதிபர்.
Reviewed by Madawala News
on
October 07, 2022
Rating:

Recipe கேட்டு சொல்றியா😌
ReplyDelete