கடந்த 2020ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் போது மாத்தறை,
திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த தெவ்மி ரன்சரா, இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் இரண்டு கைகளும் சரிவர செயற்படாத நிலையிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக் கொண்டிருந்தார்
கணிதப் பிரிவில் உயர்தரம் கற்கும் ஆசையைக் கொண்டிருந்த போதும் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்
நடக்க முடியாத அவரை காலையில் பாடசாலைக்கும் மாலையில் வீட்டுக்கும் சுமந்து செல்வது அவரின் பெற்றோருக்கு சுகமான சுமையாகவே இருந்தது. எழுதும் போது பேனையின் மூடியைக் கழற்றி இன்னொருவர் அவரது கையில் பேனையைக் கொடுக்க வேண்டும்.
கொப்பியில் ஒரு பக்கத்தை எழுதி முடித்தால் மறுபக்கத்தில் தொடர இன்னொருவர் தான் அந்தத் தாளைப் புரட்டிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் உயர்தரக் கல்வியை மன உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருந்த அந்த சாதனைச் சிறுமி இன்று இவ்வுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். காய்ச்சல் வடிவில் வந்த காலன் அவரை அழைத்துச் சென்று விட்டான்
சென்று வா மகளே.. ஆழ்ந்த இரங்கல்கள் சின்ன தேவதையே...
- அஷ்ரப் அலி பரீத்
ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்ற சாதனைச் சிறுமி எம்மை விட்டுச் சென்றார் 😢
Reviewed by Madawala News
on
October 12, 2022
Rating:

No comments: