கால்நடைகளின் ஏப்பத்துக்கு வரி ; பண்ணையாளர்கள் எதிர்ப்பு



காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பசுமையில்ல வாயுவை வெளியிடும் பண்ணை விலங்குகளுக்கு வரி விதிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது.


இந்த வரி கொண்டு வரப்படுவது உலகில் இதுவே முதலாவது தடவை என நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தின் 6.2 மில்லியன் மாடுகள் இயற்கையாக வெளியிடும் வாயுக்கள் அந்நாட்டின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ளது.


இந்நிலையில் இந்தக் கால்நடைகளின் குதவழிக்காற்று மற்றும் ஏப்பத்தில் உள்ள மெதேன் வாயுவுக்காக அந்த விலங்குகளின் உரிமையாளர்கள் வரி செலுத்த இந்தத் திட்டம் பரிந்துரைக்கிறது.


இந்தத் திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.


எனினும் இதற்கு நியூசிலாந்து பண்ணையாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


கால்நடைகளின் ஏப்பத்துக்கு வரி ; பண்ணையாளர்கள் எதிர்ப்பு கால்நடைகளின் ஏப்பத்துக்கு வரி ; பண்ணையாளர்கள் எதிர்ப்பு Reviewed by Madawala News on October 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.