தாயார் தனக்கு ஏசினார் என்று வகுப்பறையில் கல்வி பயின்றுகொண்டிருந்த மூன்று பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விரட்டியடித்த அதிபர்.
தாயாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வகுப்பறையில் கல்வி பயின்றுகொண்டிருந்த மூன்று பிள்ளைகளை அதிபர் பாடசாலையிலிருந்து விரட்டியடித்த சம்பவம் அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்துக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வகுப்பறையில் பிள்ளைகள் இருந்தபோது அவர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மூவரும் நுழைவாயிலுக்கு முன்பாக வெகுநேரம் காத்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்காரணமாக பெற்றோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பிள்ளைகளின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார். இது தொடர்பில் பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது, தாயார் தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டியதாகவும் அதனாலேயே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தாயார் தனக்கு ஏசினார் என்று வகுப்பறையில் கல்வி பயின்றுகொண்டிருந்த மூன்று பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விரட்டியடித்த அதிபர்.
Reviewed by Madawala News
on
October 12, 2022
Rating:

indha adhibarai thai keelaha thonga vittu 300 kasaiyadi kodukka vendum
ReplyDeleteindha adhibarai thalai keelaha thonga vittu 300 kasaiyadi kodukka vendum
ReplyDelete