" கையில் பணம் இல்லாததால் நான் பூமிக்கு வர முடியாமல் விண்வெளியில் சிக்கி உள்ளேன்" ; போலி விண்வெளி வீரரின் மோசடிக்கு மயங்கி ஒரு கோடி வரை பணம் அனுப்பிய பெண்.



பண மோசடி செய்பவர் ஒருவர் தான் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் எனவும் தற்போது விண்வெளியில் சிக்கி உள்ளதாகவும், பூமிக்கு திரும்பி வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு ஜப்பானின் 65 வயது பாட்டியை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.


குறிப்பிட்ட நபர் அந்த பெண்ணை இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தின் மூலம் சந்தித்து உள்ளார்.


நபர் தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிவதாகவும், செல்போன்களுக்கு குறைந்த கவரேஜ் இருப்பதாகவும் கூறி விண்வெளியின் சீரற்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அந்த பக்கத்தில் இருந்து பலருக்கு செய்தி அனுப்பி வலையை விரித்துள்ளார்.

அதில் ஒரு 65 வயது பாட்டி சிக்கி உள்ளார்.

தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பதாகவும், பூமிக்கு திரும்பி வர தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.


பூமிக்கு திரும்ப ராக்கெட் மற்றும் பயண செலவுகளுக்கு பணம் இல்லாததால் அங்கேயே இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அதையும் அந்த பாட்டி நம்பியுள்ளார். அதோடு மட்டுமின்றி பூமியில் தரையிறங்கியவுடன் 65 வயதான ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். அவர் ஜப்பானில் தனது வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாகவும் அதற்காக பூமிக்கு வர பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 5 வரையான காலத்தில் இலங்கை பண மதிப்பில் சுமார் 1 கோடி வரை குறிப்பிட்ட பாட்டி அவருக்கு money transfer கள் மூலம் பணம் செலுத்தி உள்ளார்.

தொடர்ந்து பணம் அனுப்புமாறு கோரிக்கைகள் வரவே பாட்டிக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.

போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த வழக்கு தற்போது காதல் மோசடியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

" கையில் பணம் இல்லாததால் நான் பூமிக்கு வர முடியாமல் விண்வெளியில் சிக்கி உள்ளேன்" ; போலி விண்வெளி வீரரின் மோசடிக்கு மயங்கி ஒரு கோடி வரை பணம் அனுப்பிய பெண். " கையில் பணம் இல்லாததால் நான் பூமிக்கு வர முடியாமல் விண்வெளியில் சிக்கி உள்ளேன்" ;  போலி விண்வெளி வீரரின் மோசடிக்கு மயங்கி ஒரு கோடி வரை பணம் அனுப்பிய பெண். Reviewed by Madawala News on October 12, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.