போரின் போது பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அதனை நிறுத்துங்கள்.
போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்று கூறிய அவர், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்த செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போரின் போது பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அதனை நிறுத்துங்கள்.
Reviewed by Madawala News
on
October 12, 2022
Rating:

No comments: