தம்புள்ளை விகாரை மலர்த்தட்டு 11 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போனது.


 

தம்புள்ளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லெந்தோர – கிரிலஸ்ஸ ஸ்ரீ புஷ்பாராம விஹாரையில்

புதிதாக நிர்மாணிக்கப்படும் தர்ம மண்டப கட்டிடத்திற்கு ,நிதி திரட்டும் வகையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ஏலத்தின் இறுதி நாளான இன்று மலர்த்தட்டு ஒன்று 11 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.


கிரிலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களான எம்.எம். பிரியந்த பண்டார, எம்.எம்.பத்மா நிமல் பண்டார, எம்.எம்.சாந்த பண்டார ஆகியோர் இந்த மலர்த்தட்டை ஏலத்திற்கு எடுத்துள்ளனர்.


இந்த ஏலம் இன்று மதியம் 12.00 மணி வரை நீடித்தது, அங்கு ஏராளமானோர் ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரம், பத்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை ஏலம் எடுத்தனர்.


அங்கு கடைசியாக ஏலத்தொகையான 11 இலட்சம் ரூபாவை ஆலயத்திற்கு வழங்கிய இந்த மூன்று சகோதரர்களும் மலர்த் தட்டை புத்தருக்கு சமர்ப்பித்தனர்.


இலங்கை வரலாற்றில் நான்கு மணித்தியாலங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் ஏலத்தில் மலர்தட்டு ஒன்று 11 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டமை இதுவே முதல் தடவை என ஏற்பாட்டா ளர்கள் தெரிவித்தனர்.

தம்புள்ளை விகாரை மலர்த்தட்டு 11 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போனது. தம்புள்ளை விகாரை  மலர்த்தட்டு 11 இலட்சம் ரூபாவுக்கு  ஏலம் போனது. Reviewed by Madawala News on October 12, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.