"தவறான தகவல்களுக்கு எதிராவோம்" கண்டியில் நடைபெற்ற பயிற்சி நெறி.



இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின்(SLPI) ஏற்பாட்டில், CFLI மற்றும் MYTHOS LABS இன் அனுசரணையில், "தவறான தகவல்களுக்கு எதிராவோம்" எனும் தலைப்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக துறைசார்ந்தோருக்கான பயிற்சி நேற்று செப்டம்பர் 29 ஆம் திகதி (வியாழக்கிழமை) கண்டியில் நடைபெற்றது.

கண்டி Oak ray Regency ஹோட்டலில் தமிழ் மொழியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆண் மற்றும் பெண் ஊடகவியலாளர்கள், ஊடக துறைசார் மாணவர்கள் உட்பட 17 பேர் கலந்துகொண்டனர். அதேவேளை சிங்கள மொழி மூலமான ஊடக நிகழ்ச்சியும் இந்த ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையின் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவது மற்றும் அதன் தாக்கம், தவறான தகவல்களை அடையாளம் கண்டு அதற்கு பதிலளிப்பது , தவறான தகவல்களைப் அறிக்கையிடுதல் மற்றும் தவறான தகவல் வலையமைப்புகளுக்கு முகங்கொடுத்து இணைய பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்த செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாடுகளுடன் கூடிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பயிற்றுவிப்பாளராக விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் திரு. மொஹமட் பைரூஸ் இணைந்துகொண்டார்.

இலங்கையில் தவறான தகவல்கள் பரவி வரும் இக்காலத்தில் இது ஒரு அவதானத்திற்குரிய தலைப்பாக இருப்பதனால் பல ஊடகவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இத்திட்டத்தில் இணைந்தனர். சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தமது தொழில் அனுபவத்தையும் சேர்த்து செயலமர்வை செழுமைப்படுத்தியதுடன், அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுற்றது.

"தவறான தகவல்களுக்கு எதிராவோம்" கண்டியில் நடைபெற்ற பயிற்சி நெறி.  "தவறான தகவல்களுக்கு எதிராவோம்" கண்டியில் நடைபெற்ற பயிற்சி நெறி. Reviewed by Madawala News on September 30, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.