திரிபோஷாவில் அஃப்லாடோக்சின் இரசாயனம் இல்லை... பத்திரிகையில் வெளியான குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்தார்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் ‘திரிபோஷா’வில் Aflatoxin என்ற புற்றுநோயானது காணப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.
நாளிதழ் ஒன்றில் வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான செய்தியை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, இன்று பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை எழுப்பினார், அமைச்சருக்குத் தெரியுமா என்றும் ‘திரிபோஷ’ விநியோகம் தொடர்பில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திரிபோஷாவில் அஃப்ளாடோக்சின் இரசாயனம் இல்லை என்றும், அந்தச் செய்தி அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான அடிப்படை ஆதாரமற்ற அறிக்கையை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
திரிபோஷாவில் அஃப்லாடோக்சின் இரசாயனம் இல்லை... பத்திரிகையில் வெளியான குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்தார்.
Reviewed by Madawala News
on
September 21, 2022
Rating:

No comments: