கட்டாய ஓய்வு வயது 60 ஆனதால் சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்... சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்பட வாய்ப்பு.



இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரையின்படி அரசத்துறையின் கட்டாய ஓய்வு வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் 31ம் திகதிக்குப் பிறகு சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற உள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் ஓய்வு பெறும் நாளாக அது இருக்கும் என அவர்கள் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 43 விசேட வைத்திய நிபுணர்களும், கண்டி தேசிய வைத்தியசாலையின் 30 விசேட வைத்திய நிபுணர்களும், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் 17 விசேட வைத்திய நிபுணர்களும், சிறுவர் வைத்தியசாலையின் 15 விசேட வைத்திய நிபுணர்களும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் 9 விசேட வைத்திய நிபுணர்களும் ஓய்வுபெறவுள்ளனர்.

மேலும், சுமார் 8 எழும்பு மச்சை மாற்று தொடர்பான விசேட மருத்துவர்களும் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளனர்.

அவ்வாறான விசேட வைத்தியர்கள் 33 பேர் மட்டுமே நாட்டில் உள்ள நிலையில், அவர்களில் இருவர் ஏலவே ஓய்வு பெற்றுள்ளதுடன், 5 பேர் வெளிநாடு செல்ல தயாராவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 14 எலும்பு மச்சை மாற்று விசேட வைத்தியர்களே எஞ்சியுள்ளதாகவும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் எலும்பு மச்சை மாற்று சத்திரசிகிச்சைக்கான திகதிகள் தற்போது 2025 ஆம் ஆண்டிற்கு வழங்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கட்டாய ஓய்வு வயது 60 ஆனதால் சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்... சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்பட வாய்ப்பு. கட்டாய ஓய்வு வயது 60 ஆனதால் சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்...  சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்பட வாய்ப்பு. Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.