நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க வேண்டும் - சூப்பர் மார்க்கட்களில் மது விற்க அனுமதிக்க வேண்டும் ; டயானா
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டுக்கு டொலர் வேண்டுமென கூறுகிறார்கள், ஆனால் இரவு விடுதிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. இரவு விடுதி என்பது விபச்சார விடுதி அல்ல. அதை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை மதுபான நிலைங்களை திறக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் இரவு 9 மணிக்கு மேல் மக்கள் கறுப்புச் சந்தைகளில் மதுபானங்களை கொள்வனவு செய்வார்கள். இதனூடாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி இல்லாமல் போகிறது.
அத்தோடு பல்பொருள் அங்காடிகளுக்கும் மதுபான விற்பனைக்கான அனுமதி பத்திரங்களை வழங்க வேண்டும்.- என்றார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க வேண்டும் - சூப்பர் மார்க்கட்களில் மது விற்க அனுமதிக்க வேண்டும் ; டயானா
Reviewed by Madawala News
on
September 21, 2022
Rating:

No comments: