நிந்தவூர் Ztm ஆஷிக் தொடர்ச்சியாக 5வது முறை தங்கம்!!யாக்கூப் பஹாத்
தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் 2022.08.04 திகதி இவ் ஆண்டுக்கான இலங்கை இராணுவ தொண்டர் படையனியினருக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் இலங்கை இராணுவ இயந்திர வியல் அணியின் வீரரும் நிந்தவூர் மதினா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரருமான Ztm ஆஷிக் 47.54 M தூரம் வீசி புதிய போட்டி சாதனையுடன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்..

இதற்கு முன்னர் 46.58M  என்பதே இவரது சொந்த பிரதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இவர் 2019ம் ஆண்டில் 44.27M தூரம் வீசி புதிய போட்டி சாதனை படைத்து இருந்தார் மீண்டும் இவ்வாண்டு அவரே அவரது போட்டி சாதனையை முறியடித்து புதிய போட்டி சாதனை 47.54M  நிகழ்த்தி இருப்பது   விஷேட அம்சமாகும் மேலும் இராணுவ தொண்டர் படையணி  விளையாட்டு விழாவில் பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக 5 வது தடவையாக தங்க பதக்கம் பெறும் முதல் வீரரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிந்தவூர் Ztm ஆஷிக் தொடர்ச்சியாக 5வது முறை தங்கம்!! நிந்தவூர் Ztm ஆஷிக் தொடர்ச்சியாக 5வது  முறை தங்கம்!! Reviewed by Madawala News on August 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.