கந்தளாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற (பாணந்துரை பிரதேச மொஹம்மட் முஸ்னி) நீரில் மூழ்கி உயிரிழப்பு.கந்தளாய் யூசுப்
பாணந்துரை,அம்பலந்துரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மொஹம்மட் முஸ்னி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று(4) மாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்த நபர் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில் செய்து வந்த நிலையில் பாணந்துரையில் இருந்து கந்தளாயிக்கு சுற்றுலா சென்ற நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற போதே கந்தளாய் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஜனாசா கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தளாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற (பாணந்துரை பிரதேச மொஹம்மட் முஸ்னி) நீரில் மூழ்கி உயிரிழப்பு. கந்தளாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற (பாணந்துரை பிரதேச மொஹம்மட் முஸ்னி) நீரில் மூழ்கி உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.