நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார்சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். 


புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு ஆளானார். 


அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 


இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முற்படும் காட்சி, இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தெரிந்தது. 


சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால், ருஷ்டியின் நிலைமை தொடர்பான தகவல் இன்னும் தெரியவில்லை.

BBC-

நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார் நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார் Reviewed by Madawala News on August 12, 2022 Rating: 5

1 comment:

Powered by Blogger.