6 தமிழ் அமைப்புகளுக்கான தடை நீக்கப்பட்டு 3 இஸ்லாமிய அமைப்புகள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது..




நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த 6 சர்வதேச தமிழ் அமைப்புகளின் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 


அத்துடன், 316 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 


கடந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது. 


ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டின் படி, 577 நபர்களும் 18 அமைப்புகளும் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பாதுகாப்பு அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


அந்த அமைப்புகளில் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் பேரவை, கனேடியத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 


இதேவேளை, ஐ.நா பாதுகாப்பு சபையின் உடன்படிக்கையின் பிரகாரம் மேலும் மூன்று அமைப்புக்கள் மற்றும் 55 நபர்களுக்கு தடை விதிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதன்படி 15 சர்வதேச அமைப்புகளும் 316 நபர்களும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 


இதே நேரம் புதிதாக 3 அமைப்புகளும் 55 நபர்களும் தடை பட்டியலுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.


தாருல் அதர் குரான் மத்தரஸா எனப்படும் தாருல் அதர்.இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்( SLISM) எனப்படும் ஜம்மியா.சேவ் த பேர்ள் எனப்படும் சேவ் த பேர்ள் சமூகம்.ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

6 தமிழ் அமைப்புகளுக்கான தடை நீக்கப்பட்டு 3 இஸ்லாமிய அமைப்புகள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.. 6 தமிழ் அமைப்புகளுக்கான தடை நீக்கப்பட்டு 3 இஸ்லாமிய அமைப்புகள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.