கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு.(அஷ்ரப் ஏ சமத்)
பாக்கிஸ்தான் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர
நேற்றைய தினம் 14/08/2022


இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஆலயத்தின் பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகா் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமா் பாருக் புர்க்கி தலைமையில் நடைபெற்றது.


பாக்கிஸ்தான் கொடியேற்றுதல் தேசிய கீதம் இசைத்தல், மற்றும் பாக்கிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தினச் செய்திகள் உயா் ஸ்தாணிகர் ஆலயத்தின் செயலாளா் ஊடகச் செயலா்களினால் வாசிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா்

பாக்கிஸ்தான் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இலஙகைக்கும் பாக்கிஸ்தானுக்கும் நீண்ட கால உறவு இருந்து வருகின்றது. பாக்கிஸ்தான் இலங்கை நட்புரவுத் தொடா்புகள் மற்றும் கல்வி , வா்ததகம்,ஏற்றுமதி, இறக்குமதி, கலை கலாச்சாரம், பௌத்த மதம், சுற்றுலாத்துறை, ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளில் சுதந்திரமடைந்த கடந்த 75 வருட காலமாக எமது இராஜாந்திர உறவுகள் இருந்து வருகின்றன. இலங்கையின் கடந்த கால யுத்த காலத்திலும் பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவிலும் பங்களிப்பினை இலங்கைக்கு செய்து வந்துள்ளது.


காயிதே மில்லத் முஹம்மதலி ஜின்னா அவா்களின் எமது நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுத் தந்தாா். இந் சுதந்திர தின நிகழ்வில் அவரை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம். பாக்கிஸ்தான் - இலங்கை கலாச்சாரம் மற்றும் பௌத்த மதத்தின் தொடா்புகள் 2500 ஆண்டுகள் இருந்து வந்துள்ளன. தற்போதைய இலங்கை நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பிரதம மந்திரி தினேஸ் குணவா்த்தன ஆகியோறின் தலைமையில் பாக்கிஸ்தான் நட்புறவுகள் மீண்டும் வலுப்படுத்தப்படுமெனவும் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அங்கு உரையாற்றினாா்.

H.E. Maj. Gen. (R) Umar Farooq Burki HI (M), High Commissioner of Pakistan in Sri Lanka
கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு. கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.