இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வது உட்பட தீர்வுகளுக்கு, புதிய அமைச்சரவையில் எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்றோர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்.



நூருல் ஹுதா உமர்

புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது.


அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்த நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்ட  கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் இலங்கை நாட்டுக்கு பல கோடி ரூபாய் பணங்களை அரபு நாடுகளில் இருந்தும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்தும் உதவியாக பெற்றுக்கொள்ள முடியும்.


கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் தான் அரசியல் அதிகாரத்திலிருந்த காலங்களில் பல கோடிக்கணக்கான பணங்களை இலங்கை நாட்டுக்கு உதவியாக பெற்று கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் தனது சேவையை வழங்கியுள்ளார். இனவாத, பிரதேசவாத அரக்கர்களை கொன்ற ஆட்சியாக மலரவிருக்கும் ஜனாதிபதி ரணிலை தலைமையாக கொண்ட இந்த அரசாங்கத்தில் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்ற மொழியாற்றல், திறமை, நாட்டுப்பற்று மிக்கவர்கள் அமைச்சர்களாக அல்லது அதிகாரம் பொருந்தியர்வர்களாக இருக்கவேண்டியது நாட்டின் காலத்தின் தேவையாக அமைந்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வது உட்பட தீர்வுகளுக்கு, புதிய அமைச்சரவையில் எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்றோர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும். இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வது உட்பட தீர்வுகளுக்கு,  புதிய அமைச்சரவையில்  எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்றோர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும். Reviewed by Madawala News on July 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.