நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை / இரவு வேளைகளில் மழை..



மேல் மாகாணத்திலும்  அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


ஏனைய பிரதேசங்களின்  பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

****************************


புத்தளம்   தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில்  மழை  பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில்  தென் மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும். 


சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி,ஹம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில்  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 


நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை / இரவு வேளைகளில் மழை.. நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை / இரவு வேளைகளில் மழை.. Reviewed by Madawala News on July 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.