திருட்டு மாட்டை இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும்போது சுற்றிவளைத்து பிடித்த பொலீசார். மஹியங்கனை கிரந்துருக்கோட்டை பிரதேசத்திலிருந்து  பதுளை பிட்டிய  இறைச்சிக் கடைக்கு இறைச்சிக்காக கொண்டுவரப்பட்ட 2 கறவை பசுக்கள்    பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் இருவருடன் இரண்டு பசுக்களும் மீட்கப்பட்டுள்ளன.


மஹியங்கனை கிரந்துருக்கோட்டை       பிரதேசத்தில் கறவை பசுக்கள் காணாமல் போனது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு தகவல் பெற்றுக் கொடுக்கப்பட்டது கறவை பசுக்கள் காணாமல் போன முறைப்பாடு தொடர்பில்  விசாரணைகள் , தேடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது இதனை அடுத்து நேற்றைய தினம் கிடைக்கப்பட்ட ரகசிய தகவலையடுத்து  பதுளை பிட்டிய பிரதேசத்தில் பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் இருவருடன் இரண்டு பசுக்களும் மீட்கப்பட்டுள்ளன கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார் மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

செய்தியாளர்

இரா சுரேஷ்குமார்

திருட்டு மாட்டை இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும்போது சுற்றிவளைத்து பிடித்த பொலீசார். திருட்டு மாட்டை இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும்போது  சுற்றிவளைத்து பிடித்த பொலீசார். Reviewed by Madawala News on June 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.