பிரதமர் பதவியை ஏற்க தயார் ; ஜனாதிபதிக்கு சஜித் கடிதம் அனுப்பினார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சிதலைவருமான
 சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், மகாநாயகர் உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, சில நிபந்தனைகளுக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ் இடைக்கால அரசாங்கமொன்றை, அமைப்பதற்கும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்றவகையில் பிரதமர் பதவியை ஏற்கவும் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்
பிரதமர் பதவியை ஏற்க தயார் ; ஜனாதிபதிக்கு சஜித் கடிதம் அனுப்பினார்.  பிரதமர் பதவியை ஏற்க தயார் ; ஜனாதிபதிக்கு சஜித் கடிதம் அனுப்பினார். Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.