இன்று மாலை 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு



மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்
 அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40
km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியியின் மத்தியிலும் ஆந்திரப் பிரதேசத்தின் கரையுடனும் இணைந்ததாக காங்கேசன்துறையிலிருந்து சுமார் 670 km தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமானது அதே பிரதேசத்தில் சுழண்டு கொண்டிருப்பதுடன் நாளை காலையளவில் மேலும் நலிவடைந்து தாழ் அமுக்கமாக மாற்றமடையக்கூடும்.

ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால அறிவுரைகளை கவனதிற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம்,கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி
இன்று மாலை 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு இன்று மாலை 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.