பெண்களுக்கென பிரத்தியேக நூலகம் திறந்து வைக்கப்பட்டது,



பெண்களுக்கென பிரத்தியேக நூலகம் திறந்து வைக்கப்பட்டது,

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில், பெண்களுக்கென பிரத்தியேக நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.


ஏறாவூரில்தான் பெண்களுக்கென இலங்கையிலேயே தனியான பொதுச் சந்தையும் உள்ளது. அதேபோல், பெண்களுக்கென தனியாக உடற்பயிற்சி ஏற்பாடுகளும் ஏறாவூர் வாவிக் கரையோரத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


“பாத்திமா மகளிர் நூலகம்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாசிகசாலைத் திறப்பு விழா, ஏறாவூர் வாவிக் கரையோரத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நகர சபைத் தவிசாளர் தலைமையில் நேற்று (17) மாலை நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஏறாவூரின் பெண் ஆளுமைகளான பிரதேச செயலாளர் நிஹாறா, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா, பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் சிஹானா, தென்னைப் பயிர்ச் செய்கை ஆய்வு கூடப் பொறுப்பாளர் ஜாஹிறா நகர சபை உறுப்பினர் சுலைஹா உட்பட ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், நகர சபை பிரதித் தவிசாளர் ஏ.எஸ்.எம். றியாழ் உட்பட இன்னும் பல அதிதிகள் கலந்துகொண்டனர்

பெண்களுக்கென பிரத்தியேக நூலகம் திறந்து வைக்கப்பட்டது, பெண்களுக்கென பிரத்தியேக நூலகம் திறந்து வைக்கப்பட்டது, Reviewed by Madawala News on May 18, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.