நேற்றைய ஆர்ப்பாட்ட சம்பவத்தால் 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.



மிரிஹான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தினால் 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக விசேட அதிரடிப்படையினர் 18 பேர் உட்பட 24 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய 53 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு கைதானவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
நேற்றைய ஆர்ப்பாட்ட சம்பவத்தால் 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய ஆர்ப்பாட்ட சம்பவத்தால் 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. Reviewed by Madawala News on April 01, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.