நண்பியின் திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு. #இலங்கைபாணத்துறை – கொரகான பகுதியில் ஹோட்டல் ஒன்றில் 
இடம்பெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாதுவ – பொதுபிடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நிஷான் லக்ஷான் ஜயரத்ன என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று உயிரிழந்த குறித்த இளைஞர் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது ஏனைய நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் பாணத்துறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் , மரண விசாரணைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
நண்பியின் திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு. #இலங்கை நண்பியின் திருமண நிகழ்வில்  நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு. #இலங்கை Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.