பத்தரமுல்லை சீலரத்ன தேரர் செலுத்த வேண்டிய நீர் கட்டண தொகை 71,991.17 ரூபா ; நீர் வழங்கல் அமைச்சு தெரிவிப்பு.



பத்தரமுல்லை சீலரத்ன தேரரின் திஸ்ஸமஹராம ,காவன்திஸ்புர ,111 ஏ என்ற முகவரியை கொண்ட

விகாரைக்குரிய நீர் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் 2021 டிசம்பர் 24 ஆம் திகதியாகும் போது குறித்த விகாரையின் நீர் கட்டண பட்டியலுக்கு மொத்தமாக 71,991.17 ரூபா இணைந்துள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையின் பிரகாரம் பல சந்தர்ப்பந்தங்களில் நீர் கட்டணத்தை செலுத்தமாறு மதிப்புக்குரிய தேரருக்கு அறிவுறுத்தப்பட்டது.


மதஸ்தளங்களுக்கு வழங்கப்படும் சலுகையின் அடிப்படையில் குறித்த விகாரைக்கு தடையின்றி நீர் விநியோகம் வழங்கப்பட்டது.

ஐந்தாயிரம் ரூபாவுக்கு அதிகமாகவுள்ள கட்டணம் செலுத்தப்படாத தருணத்தில் நீர் விநியோகத்தை இடைநிறுத்தக் கூடிய சட்டப்பூர்வ அதிகாரம் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு உள்ளது.


இருந்த போதும் பிரதேசத்திலுள்ள  வணக்கஸ்தளம் என்பதனால் பல சந்தர்ப்பங்களில் நீர் விநியோகத்தை இடைநிறுத்தாமல் கட்டணத்தை அவசரமாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

2022 ஜனவரி 13 ஆம் திகதியன்று 10 ஆயிரம் ரூபா கட்டணமாக செலுத்தப்பட்டதாக பத்தரமுல்லை சீலரத்ன தேரரினால் நீர் வழங்கல் சபைக்கு அறிவிக்கப்பட்டது.  அந்த சந்தர்ப்பத்தில் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நீர் வழங்கல் சபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது( செலுத்தப்பட்டதாக தேரரினால் கூறப்பட்ட தொகை 2022.01.18 ஆம் திகதி வரையிலும் சபைக்குரிய கணக்கிற்கு வரவில்லை).


செலுத்தப்பட வேண்டிய முழு கட்டணத்தை செலுத்தாது அதில் குறிப்பிட்ட தொகை மாத்திரம் செலுத்தப்படும் போது இடைநிறுத்தப்பட்ட நீர் விநியோகம் மீள தடையின்றி விநியோகிப்பதற்கு சபை நடவடிக்கை எடுப்பதோடு, செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் கட்டம் கட்டமாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி பிரகடணத்தில் கையொப்பமிட வேண்டும். எனினும் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் குறித்த பிரகடணத்தில் கையொப்பமிடாமல் நிராகரித்துள்ளார்.


எனினும் குறித்த விகாரையானது மதிப்புக்குரிய தேரர்கள் தங்குமிடம் என்பதனால் நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வழங்கிய பணிப்புரைக்கு அமைய அன்றைய தினமே மீளவும் நீர் விநியோகம் வழங்கப்பட்டது.

மேலும் அரசின் உத்தியோகபூர்வ வாசஸ்தளங்களில் நீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கட்டணத்தை அறிவிடுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக நீர் வழங்கல் அமைச்சர் முன்வைத்த  கோரிக்கையை அடுத்து பெரும்பாலான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நீர் கட்டணத்தை செலுத்தி விட்டதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


மகேந்திர ஹரிச்சந்திர

பணிப்பாளர்(ஊடகப் பிரிவு)

நீர் வழங்கல் அமைச்சு

பத்தரமுல்லை சீலரத்ன தேரர் செலுத்த வேண்டிய நீர் கட்டண தொகை 71,991.17 ரூபா ; நீர் வழங்கல் அமைச்சு தெரிவிப்பு. பத்தரமுல்லை சீலரத்ன தேரர் செலுத்த வேண்டிய  நீர் கட்டண தொகை 71,991.17 ரூபா  ;  நீர் வழங்கல் அமைச்சு தெரிவிப்பு. Reviewed by Madawala News on January 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.