16 வருடங்களாக பொரளை தேவாலயத்தில் பணியாற்றி வருபவரே, 13 வயது சிறுவனின் ஊடாக குண்டு வைத்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம்.பொரளை-வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்த
கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கைதான நால்வரில், 56 வயதுடைய மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சந்தேக நபர் சுமார் 16 வருடங்களாக அந்த தேவாலயத்தில் பணியாற்றி வருவதோடு, தேவாலயத்திற்குள் கைக்குண்டை வைப்பதற்காக 13 வயது சிறுவனின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கைக்குண்டு தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட சில பொருட்களையும் சந்தேகநபர் தங்கியிருந்த அறையிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
16 வருடங்களாக பொரளை தேவாலயத்தில் பணியாற்றி வருபவரே, 13 வயது சிறுவனின் ஊடாக குண்டு வைத்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம். 16 வருடங்களாக பொரளை தேவாலயத்தில் பணியாற்றி வருபவரே, 13 வயது சிறுவனின் ஊடாக குண்டு வைத்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம். Reviewed by Madawala News on January 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.