தலைவர்கள் எதிராக வாக்களிக்க கட்சி எம் பிக்கள் பட்ஜட்டுக்கு ஆதரவளித்தனர்.





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைமைகள் தனித்துவிடப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க இந்தக் கட்சிகள் தீர்மானித்திருந்தன.


எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். இந்த இரண்டு கட்சிகளின் ஏனைய உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.


முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எம எஸ் தௌபீக் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் கடைசி நேரத்தில் வாக்களிப்பை பகிஷ்கரிப்பு செய்திருந்தார்.


இதேவேளை கட்சித் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தலைவர்கள் எதிராக வாக்களிக்க கட்சி எம் பிக்கள் பட்ஜட்டுக்கு ஆதரவளித்தனர்.  தலைவர்கள் எதிராக வாக்களிக்க கட்சி எம் பிக்கள் பட்ஜட்டுக்கு ஆதரவளித்தனர். Reviewed by True Nation on November 22, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.