வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.



2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு 93 மேலதிக  வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 


இதற்கு 153 ஆதரவாக வாக்குகளும் எதிராக 60  வாக்குகளும் அளிக்கப்பட்டன.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம் பிக்களான ஹரீஸ் , பைஸல் காசிம் , நஸீர் அஹமத் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான இஷாக் ரகுமான் , முஷர்ரப், அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்த அதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம் பிக்களான ரவுப் ஹக்கீம்,   மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் உள்ளிட்டவர்கள் எதிராக வாக்களித்தனர்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு 93 மேலதிக  வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. Reviewed by True Nation on November 22, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.