இலங்கையில் சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான அரிய வகை இரத்தினக்கல்.. இரத்தினக்கல் வியாபாரி மொஹமட் பஸ்றின் நஸீர் கொள்வனவு செய்தார்.

 


இலங்கையில் மிகவும் அரிய வகையை சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று

(Natural Phenakite gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.


பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்றின் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.


இந்த நிலையில் குறித்த இரத்தினக்கல்லின் எடை 616.90 கரட் எனவும், இதன் பெறுமதி சுமார் 100 கோடி (1 பில்லியன்) ரூபா எனவும் குறித்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (NGJA) தலைவர் திலக் வீரசிங்க (Thilak Weerasinghe) கூறுகையில் இந்த இரத்தினக்கல்லானது மிகவும் அரிதானது என்பதால் விலை உயர்ந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். 
இலங்கையில் சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான அரிய வகை இரத்தினக்கல்.. இரத்தினக்கல் வியாபாரி மொஹமட் பஸ்றின் நஸீர் கொள்வனவு செய்தார். இலங்கையில்  சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான அரிய வகை இரத்தினக்கல்.. இரத்தினக்கல் வியாபாரி மொஹமட் பஸ்றின் நஸீர் கொள்வனவு செய்தார். Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.