அன்புக்குரிய மங்கள... இலங்கையை கட்டியெழுப்புவதற்கான போர்க்களத்தில் பங்குகொள்ள மீண்டும் வாருங்கள்.மூன்று மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் காலமான
 முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது முகப்புத்தகத்தில் ஒரு உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.

அன்புக்குரிய மங்கள!

சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக செய்யவேண்டிய சகல விதத்திலும் போர் செய்தீர்கள்.சுதந்திர, நேர்மையான ஆட்சிக்காக சகலரையும் ஓன்று திரட்டினீர்கள்.

பல்வகைமையை மதிக்கும் நாடு, அரசியல்வாதிகளுக்காக இல்லாமல் மக்களைப்பற்றி சிந்திக்கும் ஆட்சி முறை என சகலவற்றினதும் அடையாளம் நீங்கள் தான்.

அநீதி,ஊழல் மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் சகலரதும் மனதிலும்,அவர்களின் நடவடிக்கைகளிலும் வாழ்கிறீர்கள்.

மோட்சம் அடைவதற்கு முன் நாம் கனவுக்கண்ட சுதந்திர இலங்கையை கட்டியெழுப்புவதற்கான போர்க்களத்தில் பங்குகொள்ள மீண்டும் வாருங்கள்.
அன்புக்குரிய மங்கள... இலங்கையை கட்டியெழுப்புவதற்கான போர்க்களத்தில் பங்குகொள்ள மீண்டும் வாருங்கள். அன்புக்குரிய மங்கள... இலங்கையை கட்டியெழுப்புவதற்கான போர்க்களத்தில் பங்குகொள்ள மீண்டும் வாருங்கள். Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.