வளிமண்டலத்தில் தொடரும் தளம்பல் நிலை... மேலும் சில தினங்களுக்கு மழையுடனான காலநிலை தொடரும்.



இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற
 தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு வானிலையில் தாக்கம் ஏற்படக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் தென் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
*************************
இலஙகைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் வானிலையில் தாக்கம் ஏற்படக்கூடும்.

ஆனபடியினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் எதிர்கால வானிலை எதிர்வுகூறல்களை கவனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 km வேகத்தில் காற்று வீசும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

வளிமண்டலத்தில் தொடரும் தளம்பல் நிலை... மேலும் சில தினங்களுக்கு மழையுடனான காலநிலை தொடரும். வளிமண்டலத்தில் தொடரும் தளம்பல் நிலை... மேலும் சில தினங்களுக்கு  மழையுடனான காலநிலை தொடரும். Reviewed by Madawala News on October 27, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.