வேன் ஒன்றில் வந்தவர்கள் என்னை தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்று விட்டனர்... # 19 வயது கணவன் போலீஸில் புகார்.வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர்
 கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது ஆண் ஒருவர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவரை காதலித்து கடந்த ஜூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று குறித்த பெண் தங்கியிருந்த வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீட்டிற்கு வேன் ஒன்றில் வந்த நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வேன் ஒன்றில் வந்தவர்கள் என்னை தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்று விட்டனர்... # 19 வயது கணவன் போலீஸில் புகார். வேன் ஒன்றில் வந்தவர்கள் என்னை தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்று விட்டனர்... # 19 வயது கணவன் போலீஸில் புகார். Reviewed by Madawala News on October 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.