கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை

கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும், இந்த புதிய துணை பிறழ்வு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கூறினார்.


டெல்டா பிறழ்வை விட டெல்டா பிளஸ் பிறழ்வு 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு டெல்டா அல்லது டெல்டா பிளஸ் பிறழ்வு தொற்றாது என ஆய்வுகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், சடுதியாக உருவாகக்கூடிய புதிய பிறழ்வுகளினூடாக துணை பிறழ்வுகளும் உருவாகக்கூடும் என விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் டெல்டா பிளஸ் இலங்கையில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதை தெரிவித்துள்ளார்.


கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை Reviewed by True Nation on October 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.