அக்குரனையில் மக்களின் செலவில் பாதையை காபட் இடும் பணி... உண்டியலில் சேர்த்த பணத்தையும் வழங்கிய சிறுவன்



(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட
 மாவத்துபொல பிரதேசத்தில் அமைந்துள்ள பாதை ஒன்றை பிரதேச மக்களது செலவில் காபட்டிட்டு செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது.


இப் பாதையின் ஒரு பகுதியை அப் பிரதேச மக்கள் தமது பிரதேச மக்களிடம் பணம்சேகரித்து செப்பனிடுவதற்கு முன் வந்துள்ளனர்.


இப் பாதையை செப்பனிடுவதற்கு பயன்படுத்துமாறு அப் பிரதேசத்தில் வசிக்கும் றிஸ்வான் அஹமட் என்ற எட்டு வயது மாணவர் தனது உண்டியலில் சேர்க்கப்பட்ட 920 ரூபாய் பணத்தையும் வழங்கி முன்மாதிரியாக நடந்துள்ளது குறிப்பிட தக்கது.


இப் பாதையை செப்பனிடும் பணியை ஜெ. சஹப்தீன் அவர்கள் முன்னிண்டு நடபாத்துவதுடன், வியாபாரியான என்.எம். நவரத்ன, குமாரமொர பண்டா, மற்றும் மஹேஷ்மொரபண்டா ஆகியோரும் இதற்காக பங்களித்தனர். இப் பாதையில் சுமார 125 அடி தூரத்தை செப்பனிடுவதற்காக சுமார் மூன்று இலட்சம் ரூபாயை செலவுசெய்ய உள்ளதாக ஜே சஹப்தீன் தெரிவித்தார்.
அக்குரனையில் மக்களின் செலவில் பாதையை காபட் இடும் பணி... உண்டியலில் சேர்த்த பணத்தையும் வழங்கிய சிறுவன் அக்குரனையில் மக்களின் செலவில்  பாதையை காபட் இடும் பணி... உண்டியலில் சேர்த்த பணத்தையும் வழங்கிய சிறுவன் Reviewed by Madawala News on September 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.