தேன் எனக் கூறி மதுபானம் அருந்தக்கொடுத்த நபர் கைது - Madawala News Number 1 Tamil website from Srilanka

தேன் எனக் கூறி மதுபானம் அருந்தக்கொடுத்த நபர் கைதுமஹியங்கனை பகுதியில் பாடசாலை செல்லும் இரண்டு 
சிறுவர்களுக்கு தேன் எனக் கூறி மதுபானம் அருந்தக்கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை – கிராந்துருகோட்டை – ரத்கிந்த மஹாவெலி கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுக்கு மதுபானம் கொடுத்துள்ளார்.

இந்த பகுதியை சேர்ந்த 9 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடைக்கு செல்லும் போது அவர்களை தமது வீட்டுக்கு அழைத்து சந்தேக நபர் அவர்களுக்கு மதுபானம் பருகக் கொடுத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர்கள் மது அருந்தியுள்ள விடயத்தினை பெற்றோர் அறிந்துக்கொண்டனர்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து 58 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தேன் எனக் கூறி மதுபானம் அருந்தக்கொடுத்த நபர் கைது தேன் எனக் கூறி மதுபானம் அருந்தக்கொடுத்த நபர் கைது Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5